Ferrous Ascorbate
Ferrous Ascorbate பற்றிய தகவல்
Ferrous Ascorbate இன் பயன்கள்
இரும்புச்சத்துக் குறைபாடு இரத்தசோகை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயின் காரணமாக இரத்தசோகை சிகிச்சைக்காக Ferrous Ascorbate பயன்படுத்தப்படும்
Ferrous Ascorbate எப்படி வேலை செய்கிறது
ஃபெரஸ் அஸ்கார்பேட் என்பது இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்த்து. அது இரும்புசத்தின் (ஃபெரஸ்) செயற்கை வடிவமாகும் மற்றும் அஸ்கார்பிக் அமிலத்துடன் (அஸ்கார்பேட்), அது சிறுகுடலில் இரும்புசத்தினைக் கிரகிப்பதற்கு உதவுகிறது, அது இரத்த சிவப்பு செல் அல்லது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அத்தியாவசியமான இரும்புச்சத்தின் அளவினை இரத்தத்தில் அதிகரிக்கிறது,
Common side effects of Ferrous Ascorbate
வாந்தி, குமட்டல், கருப்பு/அடர்நிற மலம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு
Ferrous Ascorbate கொண்ட மருந்துகள்
Ferrous Ascorbate தொடர்பான நிபுணரின் அறிவுரை
- வாயு அசௌகரியத்தை குறைக்க பெரஸ் அஸ்கார்பேட்-ஐ உணவுடன் உட்கொள்ளவேண்டும்.
- தொற்றுகளுக்கு (ஆன்டிபையாட்டிக்ஸ்) சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- உங்களுக்கு வயிற்று புண் அல்லது குடலில் (குடல்புண்) அல்லது குடலில் நீண்ட நாட்களாக அழற்சி(ரீஜினல் என்டேரிடிஸ் மற்றும் அல்சரேடிவ் கொலாயிடிஸ்) போன்றவை இருந்தால் மருத்துவரிடம் கூறவும்.
- உங்களுக்கு அடிவயிறு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம், கருப்பு மலம், இரத்த வாந்தி, குறைந்த இரத்த அழுத்தம், அதிகரித்த இருதய துடிப்பு, அதிக இரத்த சர்க்கரை அளவுகள், நீர்சத்து இழப்பு, கிறுகிறுப்பு, வெளிர் தோற்றம் மற்றும் சருமம் நீலநிறமாக ஆகுதல், வீரியம் குறைதல் அல்லது வலிப்பு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ கவனிப்பை பெறவும்..
- பெரஸ் அஸ்கார்பேட்-ஐ குழந்தைகளிடம் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்கவும்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்
- இரும்பு ஊட்டச்சத்து அல்லது அதன் உட்பொருட்கள் மீது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- உங்களுக்கு உடலில் அதிகமாக தேங்கும் இரும்பு குறைபாடுகள் (ஹீமோசைடெரோசிஸ் மற்றும் ஹீமோக்ரோமடோசிஸ்), சிவப்பணுக்கள் அழிவு அதிகரிப்பினால் இரத்தத்தில் குறைந்த ஹீமோகுளோபின் (ஹீமோலைடிக் அனீமியா)அல்லது சிவப்பணுக்கள் உற்பத்தியின்மை (சிவப்பு செல் இரத்த சோகை) போன்றவை இருந்தால் இதனை உட்கொள்ளக்கூடாது.