Trioxasalen
Trioxasalen பற்றிய தகவல்
Trioxasalen இன் பயன்கள்
விட்டிலிகோ (திட்டுகளில் தோல் நிறமிழப்பு) மற்றும் சொரியாசிஸ் (வெள்ளி போன்ற செதிலான தோல் சினப்பு) சிகிச்சைக்காக Trioxasalen பயன்படுத்தப்படும்
Trioxasalen எப்படி வேலை செய்கிறது
ட்ரையாக்ஸலேன் என்பது சோர்லென்ஸ் என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் குழுவைச் சார்ந்தது (ஒளி நுண்ணுணர்வுள்ள மருந்து புற ஊதா ஒளியை கிரகித்து புற ஊதா கதிர்வீச்சு போன்று செயல்படுகிறது). மெதாக்ஸலேன் தோல் செல்கள் பெறும் புற ஊதா ஒளி A (UVA) கதிர்வீச்சினைப் பெறும் வகையை மாற்றியமைப்பதன் மூலம் செயல்படுகிறது, அதன்மூலம் நோயை அகற்றுகிறது. .
Common side effects of Trioxasalen
தோல் சிவத்தல், தோலில் கொப்புளங்கள், திரவக்கோர்வை, அரிப்பு
Trioxasalen கொண்ட மருந்துகள்
Trioxasalen தொடர்பான நிபுணரின் அறிவுரை
- ட்ரையோக்ஸ்லின் ஒரு மிகவும் வலுவான மருந்து இது உங்கள் சருமத்தை சூரிய ஒளிக்கு மிகவும் உணர்த்திறனாக்க செய்துவிடும். இதனை சூரிய ஒளி தடுப்பு அல்லது சூரிய ஒளி சகிப்பை அதிகரிக்க பயன்படுத்தக்கூடாது; அவ்வாறு செய்தால், ட்ரையோக்ஸ்லின் 14 நாட்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
- இந்த சிகிச்சையை (ட்ரையோக்ஸ்லின் மற்றும் UVA )குறைந்தபட்சம் நாற்பத்தி எட்டுமணிநேர இடைவெளியில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உட்கொள்ளவேண்டும்.
- இந்த மருந்தை வாய் வழியாக பால் அல்லது உணவுடன், உங்கள் UVA வெளிச்ச சிகிச்சைக்கு2 முதல் 4 மணிநேரத்திற்கு முன் உட்கொள்ளவேண்டும்.
- ட்ரையோக்ஸ்லின்உட்கொள்வதற்கு முன் சூரிய ஒளியில் நிற்கக்கூடாது. UVA உறிஞ்சும், மூடிக்கொள்ளும் ஆடைகள், சன் க்ளாஸ் மற்றும் வெளிப்படும் சருமத்தை மூடுதல் அல்லது சூரிய தடுப்பு க்ரீம் (SP 15 அல்லது அதற்கும் மேலான)க்ரீம் போன்றவற்றை ட்ரையோக்ஸ்லின்சிகிச்சை பெற்று இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு (24 ) அணியவேண்டும்.
- ஒவ்வொரு சிகிச்சையை அடுத்து குறைந்தபட்சம் 48 மணிநேரத்திற்கு கவனமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு சிகிச்சைக்கு பிறகு, உங்கள் சருமத்தை குறைந்தது 8 மணிநேரத்திற்கு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து காக்க வேண்டும்.
- நீங்கள் சூரிய ஒளியில் அல்லது UV விளக்கில் கூடுதல் நேரம் செலவழித்தால் ட்ரையோக்ஸ்லின்அளவை அதிகரிக்கக்கூடாது.
- ட்ரையோக்ஸ்லின்கிறுகிறுப்பை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- ட்ரையோக்ஸ்லின் தொடங்குவதற்கு முன் நீங்கள் கண் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும் மற்றும் அதன் பிறகு ஒரு வருடத்திற்கும் மேற்கொள்ளவேண்டும்.
- வறண்டு போகுதல் அல்லது ட்ரையோக்ஸ்லின்ஏற்படுத்தும் அரிப்பு போன்றவற்றுக்காக உங்கள் சருமத்தில் ஏதேனும் தடவுதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும்.
- நீங்கள் கருவுற திட்டமிருந்தாலோ, கருவுற்றிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.